Breaking News

மிராக்கில் 11 கிங்ஸ் நடத்தும் 4ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி!!

  • Share on

மிராக்கில் 11 கிங்ஸ் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட எஸ்.ஆர். நகரில் வைத்து (29.03.2025) மற்றும் (30.03.2025) ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது.



இந்த கிரிக்கெட் போட்டியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளரும், மருத்துவருமான மகிழ் ஜீவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு தொகையினை வழங்கினார். கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்க வருகை புரிந்த மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளரும் மருத்துவருமான மகிழ் ஜீவனுக்கு கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போட்டியினை 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தொடங்கி வைத்தார்.



முதல் பரிசு முதல் ஏழு பரிசுகள் வரை வழங்க முடிவு செய்யப்பட்டு முதல் பரிசு வென்றவர்களுக்கு ரூ. 25,000, இரண்டு பரிசு வென்றவர்களுக்கு ரூ. 20,000, மூன்றாம் பரிசு வென்றவர்களுக்கு ரூ. 14,000, நான்காம் பரிசு வென்றவர்களுக்கு ரூ. 9000, ஐந்தாம் பரிசு வென்றவர்களுக்கு ரூ. 6000, ஆறாம் பரிசு வென்றவர்களுக்கு ரூ. 4000, ஏழாம் பரிசு வென்றவர்களுக்கு ரூ. 2000 என முடிவுகள் செய்யப்பட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது.

முதல் பரிசுக்கான கோப்பை மற்றும் பரிசுத் தொகையை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளரும், மருத்துவருமான மகிழ் ஜீவன், இரண்டு, ஐந்து, ஆறு, ஏழாம் பரிசுக்கான கோப்பை மற்றும் பரிசுத் தொகையை SKYCON ஷிப்பிங் தனியார் நிறுவனம், மூன்றாம் பரிசுக்கான கோப்பை மற்றும் பரிசுத் தொகையை IT CONSULTANT செல்வக்குமார் ராஜேந்திரன், நான்காம் பரிசுக்கான கோப்பை மற்றும் பரிசுத் தொகையை 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார், ஆகியோர் வழங்கினர்.

இந்த கிரிக்கெட் போட்டியில் 28 அணிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மிராக்கில் 11 கிங்ஸ் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். 



  • Share on
  • Share on

Trending News