அவாட்டோ பயன்பாட்டு வணிக கருத்தரங்கம் (AVATTO APP BUSINESS SEMINAR) அவாக்சா ஆன்லைன் ஷாப் (OPC) பிரைவேட் லிமிடெட் (AVAXAA ONLINE SHOP (OPC) PVT LTD) சார்பில் இன்று (15.03.2025) மாலை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் எஸ்.ஏ.வி. விளையாட்டு மைதானம் எதிரே அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் வைத்து அவாக்சா ஆன்லைன் ஷாப் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அபுபக்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த அவாட்டோ மொபைல் ஆப் பற்றிய புரிதல்களும், இந்த ஆப் மூலம் ஆன்லைன் தொழில் சம்பந்தமான வணிகம் குறித்த விளக்கங்களும், இதன் மூலம் அவாட்டோ வாடிக்கையாளர்கள் எவ்வளவு மாதம் சம்பாதிக்க முடியும், என்பதை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
அவாட்டோ மொபைல் ஆப் கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவாக்சா ஆன்லைன் ஷாப் (OPC) பிரைவேட் லிமிடெட் சிறப்பாக செய்திருந்தனர்.