மார்ச் 24 இன்று உலக காசநோய் தினம் உலக முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.


அதைத்தொடர்ந்து இன்று (24.03.2025) தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் காசநோய், கிருமியால் வரக்கூடிய ஒரு தொற்று நோய் என அறிவேன். காசநோயாளிகளை துச்சமாக எண்ண மாட்டேன்.  காசநோயாளிகளை ஒதுக்கி வைக்காமல் ஆறுதல் அளிப்பேன். மேலும், எனது மாவட்டத்தில், காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ஆதரவினை வழங்கி, ஆரோக்கியமான வாழ்வினை பெற்றிட தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும்" காசநோய் இல்லா பொது மக்களிடையே காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, எனது மாவட்டத்திலிருந்து காசநோயை முழுமையாக ஒழித்து, தூத்துக்குடி” என்ற நிலையை விரைவில் அடைந்திட எனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிடுவேன். என்று நெஞ்சார உறுதியளிக்கின்றேன்.



என்று மாநகராட்சி, துணை ஆணையர் சரவணகுமார், பொறியாளர் சரவணன், மாநகர சுகாதார நல அலுவலர் அரவிந்த் ஜோதி மற்றும் அலுவலக பணியாளர்கள் என பலர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.