புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள கந்தசாமிபுரம் ஊராட்சி, சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

பணியின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், ராஜாராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமித்ரா, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர் தனராஜ், பிரதிநிதி ராஜாராம் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.