தி.மு.கழக தலைவர் தளபதியார் மற்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களின் ஆணைப்படியும், அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்களின் ஆலோசனையின் பேரிலும் “வெல்லும் தமிழ்பெண்கள் – மகளிர் பரப்பரை” இயக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


வரும் ஜனவரி 25 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 10 பெண்கள் என மகளிர் அணியை அமைப்பது மற்றும் புதிய வாக்குச்சாவடிகளுக்கான பூத் கமிட்டி தேர்வு செய்வது தொடர்பாக, புதுக்கோட்டை கழக அலுவலகத்தில் குமாரகிரி ஊராட்சி மற்றும் கூட்டுக்காடு ஊராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.


இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி தலைமை வகித்தார். கூட்டத்தில் மகளிர் அணியின் செயல்பாடுகள், வாக்குச்சாவடி வாரியான பொறுப்புகள் மற்றும் தேர்தல் பணிகளில் பெண்களின் பங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


கூட்டத்தில் கலந்து கொண்ட கழக நிர்வாகிகள், “வெல்லும் தமிழ்பெண்கள்” இயக்கத்தை வலுப்படுத்தி கழக வெற்றிக்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என உறுதியளித்தனர்.