“தைப்பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கைக்கேற்ப, உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்” (NMEK) கட்சியின் சார்பில் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இதுதொடர்பாக கட்சியின் தலைவர் T.P.S. பொன் குமரன் மற்றும் பொதுச் செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், BA., LL.B. ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எனது நெஞ்சில் குடியிருக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அறுவடைத் திருநாளான இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் தித்திக்கும் கரும்பைப் போன்று இனிமை பெருகிட வேண்டும். உழவர் பெருமக்களின் உழைப்பைப் போற்றும் இவ்வேளையில், உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும், செல்வமும் தடையின்றி அமைய மனதார வாழ்த்துகிறோம்” என தெரிவித்துள்ளனர்.


மேலும், “என்றும் மக்களுடன் பயணிக்கும் எமது கட்சி, ‘நம் நாடு, நம் மக்கள், நம் எதிர்காலம்’ என்ற உயரிய நோக்குடன் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடும்” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


தமிழர் பண்பாடு, உழவின் மகத்துவம் மற்றும் ஒற்றுமையை போற்றும் பொங்கல் திருநாளில், NMEK கட்சியின் இந்த வாழ்த்துச் செய்தி பொதுமக்களிடையே கவனம் பெற்றுள்ளது.