தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற இரண்டு முக்கிய நலத்திட்ட நிகழ்ச்சிகளில் G.V.மார்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலன்களை வழங்கினார்.
விளாத்திகுளம் G.V. மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டார பயனாளிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்து பயனாளிகளை வாழ்த்தினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பொறுப்பு ரூபி பெர்னாண்டோ, புதூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் சுமதி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய மற்றும் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு முகாம் அட்டைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், மாவட்ட மற்றும் வட்டார சுகாதார அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.