ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகர் குடியிருப்பு பகுதியில் மகளிர் அணி சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மக்கள் சேவகன் தளபதி A. சுதாகர் கலந்து கொண்டு, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இந்நிகழ்வில் தூத்துக்குடி மத்திய மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் விஜூ, தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர் கெளதம் பாண்டியன், அருண்பிரகாஷ், தீனதயாளன், தூத்துக்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சேவியர், தூத்துக்குடி புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும், இளைஞரணி இணை அமைப்பாளர்கள் அருண்குமார், கண்ணன், அருள் அஜய் மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் லெட்சுமணன், சந்தன முத்து, ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணி உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.