தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின் நிலத்தியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் முனைவர் டாக்டர் செல்வம், உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்து, தமிழ்நாட்டில் நிலத்தியல் துறையில் முதலிடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்ஸ்விர் பப்ளிகேஷன் இணைந்து வெளியிடும் உலகளாவிய பட்டியலில், டாக்டர் செல்வம் தொடர்ந்து 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஐந்து ஆண்டுகளாகவும் இடம்பிடித்து வருவது பெருமைக்குரிய சாதனையாகும்.
இந்த பட்டியலில் உலகளவில் சுமார் 1,00,000 விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத்துறைகளை உள்ளடக்கிய இந்த தரவரிசை, ஆராய்ச்சி தரம், மேற்கோள் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவர அடிப்படையிலான அளவுகோல்களின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.
டாக்டர் செல்வம் பெற்றுள்ள முக்கிய இடங்கள்:
புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் உலகளவில் 1,30,223 விஞ்ஞானிகளில் 1261வது இடம் (0.01%)
இந்திய அளவில் 68வது இடம்
மொத்தம் உலகளவில் 2,36,313 விஞ்ஞானிகளில் 57,017வது இடம் (0.50%)
இந்திய அளவில் 6,239 விஞ்ஞானிகளில் 965வது இடம் (0.35%)
தமிழ்நாட்டில் நிலத்தியல் துறையில் முதலிடம்
ஆராய்ச்சி பங்களிப்புகள்:
டாக்டர் செல்வத்திற்கு இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட மேற்கோள்கள் கிடைத்துள்ளன. அவர் மேற்கொண்ட முக்கியமான ஆராய்ச்சிகளில்,
மெக்சிகோவில் காலசூழ்நிலை ஆராய்ச்சி
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடிநீர் ஆய்வு
மைக்ரோபிளாஸ்டிக் பாதிப்பு தொடர்பான ஆய்வுகள் சிறப்பிடம் பெறுகின்றன.
இதுவரை அவர்:
130-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.
5 புத்தகங்களை எழுதியுள்ளார்.
20-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் சர்வதேச கருத்தரங்குகளை மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் நடத்தியுள்ளார்.
7 ஆராய்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
பாராட்டு:
இந்தச் சிறப்பான சாதனை குறித்து, வ.உ.சி கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு ஆகியோர், டாக்டர் செல்வத்தை மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்த அங்கீகாரம், டாக்டர் செல்வத்தின் அறிவியல் ஆர்வத்தையும், நிலத்தியல் துறையில் அவர் செய்த சிறப்பான பங்களிப்புகளையும் உலகளவில் வெளிப்படுத்துகிறது.
தூத்துக்குடி
உலகின் முன்னணி 2% விஞ்ஞானிகளில் வ.உ.சி கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் செல்வம் – தமிழ்நாட்டில் நிலத்தியல் துறையில் முதலிடம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்தம்மாள் காலனி பொதுநலச் சங்க ஆண்டு விழா – புதிய நிர்வாகிகள் தேர்வு!!
அடுத்த
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 109வது பிறந்தநாள் நினைவுநாள் விழா – தூத்துக்குடி பாஜக தலைமையகத்தில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026