வெற்றி நிச்சயம் தென்மண்டல மகளிர் அணி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, தூத்துக்குடி மத்திய ஒன்றிய மகளிர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
கழக தலைவர் தளபதியார் மற்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆகியோரின் ஆணைப்படியும், அமைச்சர் அண்ணாச்சி அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்களின் ஆலோசனையின் பேரிலும் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக செயலாளர் KKR ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தென்மண்டல மகளிர் அணி மாநாட்டிற்கு பெண்கள் திரளாக பங்கேற்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், பொறுப்புகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட மகளிர் சமூக வலைதள பொறுப்பாளர் மீனாட்சி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் அன்னசெல்வி, ஒன்றிய துணை செயலாளர் ஏஞ்சலின் ஜெனிட்டா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு தலைவர் பொன்னரசு, மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் KB ராஜாஸ்டாலின், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் வரலட்சுமி, ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜி, ஒன்றிய இளைஞர் அணி சண்முக நாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் மகளிர் அணி நிர்வாகிகளான ஜெயா, சித்ரா, ஜெனிட்டா, விஜயலட்சுமி மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டு, மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.