திமுக கூட்டணியில் இடம் கிடைக்காததால் அதிருப்தியடைந்த சமத்துவ மக்கள் கழகம், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்களையும் அறிவித்தது. ஆனால் திடீர் திருப்பமாக, தலைமை மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டது.


நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் அறிவுறுத்தலின்படி, சமகவினர் இப்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கே முழு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளனர். இதனால் வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் தடுக்கப்பட்டனர்.


மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தெரிவித்ததாவது, “சீட் கிடைக்காததால் போட்டியிட நினைத்தது உண்மைதான். ஆனால் மேலிட ஆலோசனையின்படி தற்போது திமுக வெற்றிக்காகவே பணியாற்றுகிறோம்” என்றார். ஒரே நாளில் முடிவு மாறிய இந்த சம்பவம், தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.