விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கழக வெற்றி வேட்பாளராக போட்டியிடும் நம் மண்ணின் மைந்தர் திரு. G.V. மார்கண்டேயன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், மாண்புமிகு அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தனது உரையில், கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு வெற்றியை உறுதி செய்யும் என்றும், ஒவ்வொரு செயல்வீரரும் வீடு தோறும் சென்று மக்களை சந்தித்து ஆதரவை திரட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள், மாநில மற்றும் மாவட்ட நிலை நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மேலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
இந்த செயல்வீரர்கள் கூட்டம், விளாத்திகுளம் தொகுதியில் கூட்டணியின் தேர்தல் பணிகளை மேலும் வேகப்படுத்தும் விதமாகவும், வேட்பாளர் G.V. மார்கண்டேயனுக்கு வலுவான ஆதரவை உருவாக்கும் வகையிலும் அமைந்தது.