தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் புத்தொழில் களம் இறுதி சுற்று இன்று (05.04.2025) நடைபெற்றது.

திறமை மற்றும் புதிய எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் சாதிக்க விரும்பினாலும் அவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் நிதியுதவி பெறுவது சவாலாக உள்ளது.
இதை மாற்ற தூத்துக்குடி இளைஞர்களுக்காக எம்.பி. கனிமொழி கருணாநிதி புத்தொழில் களம் என்ற முயற்ச்சியை தொடங்கி உள்ளார்.
இந்த புத்தொழில் களம் இறுதி சுற்று நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் எம்.பி. தலைமையில், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும் மேயர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 400 இளம் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முயற்ச்சியின் மூலம் 3 இளம் தொழில் முனைவோர்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியும், நிபுணர்களின் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பெருமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் தொழிலதிபர்கள், இளம் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கழக செயல் வீரர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.