தூத்துக்குடி அய்யனடைப்பு கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தில், சித்திரை மாதம் 26ஆம் தேதி (09-05-2026) சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் காலபைரவருக்கு தேய்பிறை அட்டமி பூஜை, அபிஷேகம், மகாயாகம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் தலைவர் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அரசு நல்ல முறையில் செயல்பட வேண்டியும், உலக அமைதி நிலவ வேண்டியும் பக்தர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மௌன பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமாக மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.