சென்னை, பிப்.17 – சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று சகா கலைக்குழு சார்பில் அனைத்து கலைஞர்களும் இணைந்து மரியாதை செலுத்தினர்.


“மனிதன் போதும் என்று சொல்வது உணவு தான்; போதாது என்று சொல்வதும் உணவு தான். அனைத்து கலைஞர்களுக்கும் சம உணவு கிடைக்க வேண்டும்” என்று கேப்டன் வலியுறுத்திய மனிதநேயக் கருத்தை நினைவுகூர்ந்து கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். கலை உலகில் உள்ள அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற அவரது எண்ணமே அவரை மக்களின் இதயத்தில் நிலைத்திருக்கச் செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.


சகா கலைக்குழுவின் “கலையும் கல்வியும்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். கேப்டன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்றும், கலைஞர்களின் உரிமை மற்றும் சமத்துவத்திற்கான அவரது கொள்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் என்றும் அவர்கள் உறுதி தெரிவித்தனர்.