தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூட்டைச் சுமை தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் 35வது ஆண்டு விழா, சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சங்கத் தலைவர் ஞானசேகர் தலைமை வகித்தார். சங்க செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். பொருளாளர் முருகேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன் தொழிலாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது, சுமை ஏற்றும்-இறக்கும் தொழிலாளர்களுக்கென தனிநல வாரியம் அமைக்க வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும், பணியின் போது காயம் ஏற்பட்டால் ரூ.50,000 மற்றும் உயிரிழப்பின் போது ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மேலும், தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்கப்பட்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசின் கவனத்திற்கு அனுப்பப்பட்டன.
விழாவில் சங்க பொதுச் செயலாளர் கணபதி சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், செயலாளர் லோகநாதன், மாநகர் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தனலட்சுமி, நிர்வாகிகள் வக்கீல் முத்துலட்சுமி, பாலசிங்கம், சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் பொன்பாண்டி, தட்சணாமூர்த்தி, கருணாநிதி, கலாஸ்டின், ஜான்டேவிட், பாக்கியசெல்வன், மாரியப்பன், இசக்கி, முருகன், முத்துராமன், பாலா உள்ளிட்ட தொழிலாளர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இறுதியாக தலைவர் நன்றியுரை வழங்கினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி தொழிலாளர்கள் சங்க 35வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடியில் ஆன்மீக பெருமைக்கு சிறப்பு மரியாதை: PMT இசக்கிராஜா தேவரை சந்தித்தது சமத்துவ மக்கள் கழகம்”
அடுத்த
அகிலாண்டபுரத்தில் இயற்கை விவசாயிகள் கருத்தரங்கமும் இலவச மருத்துவ முகாமும்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026