தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள தருவைக்குளத்தில், தூத்துக்குடி மறைமாவட்டத்திற்கு உட்பட்ட தூய மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடை விடுமுறை வேதாகம பள்ளி இந்தாண்டும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற இந்த வேதாகம பள்ளியின் நிறைவு நாள் நிகழ்ச்சி பத்தாம் நாள் இரவு உற்சாகமாக நடைபெற்றது. இதில் குழந்தைகள் கலந்து கொண்டு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். மேலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கு தந்தை அருட்திரு வின்சென்ட் அடிகளார் அவர்கள் சிறப்பு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்த நிறைவு விழாவில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.