ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மேல அரசரடி ஊராட்சி புளியமரத்து அரசரடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ 9.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்கடையை இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்
வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல் தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, ஒன்றிய பொறியாளர் காயத்ரி, ஊராட்சி செயலர் பழனிமுருகன், விற்பனையாளர் செந்தூர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, கிராம நிர்வாக அலுவலர் முத்து செல்வம், ஊர் தலைவர் சுடலைமுத்து, முன்னாள் உராட்சி மன்ற தலைவர் ரோகிணி ராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் முனியம்மாள் ராமர், ஆசிரியர் ராஜா, துப்பாஸ்பட்டி பேட்சிராஜன், கிளைச் செயலாளர்கள் முத்து பிரதிநிதிகள் முனியசாமி, இளைஞரணி முனிஷ் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.