தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை தூத்துக்குடி மாவட்ட தவெக வர்த்தக அணி கிருஷ்ண மூர்த்தி ஏற்பாட்டில் தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.


நிகழ்ச்சியில் கிஷோர், கோல்டன், ஆனந்த், சிவா, சதீஷ், ஜெகன், ஜனோஜ், சதீஷ், செல்வம், மீனாட்சி சுந்தரம், கணேஷ், முருகன், செந்தில்குமார், விஜய் சுபாகர் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.