கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 89ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அன்னாரது திருவுருவ சிலைக்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மாண்புமிகு PTR. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி. சண்முகையா MLA அவர்களும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நாடு மற்றும் தமிழரின் முன்னேற்றத்திற்காக தன்னாலான அனைத்தையும் அர்பணித்த தியாகத் தமிழனின் வரலாற்றுப் பணிகளை நினைவுகூர்ந்த விருந்தினர்கள், இளைஞர் தலைமுறை சிதம்பரனாரின் தன்னலம் பாராத தேசப்பற்று, தொழில்முனைவு, பொது நல எண்ணங்களை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நிகழ்வில் பல்வேறு அரசு அதிகாரிகள், கட்சித் தலைவர்கள், உள்ளூர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தியாகத் தமிழனுக்கு மரியாதை— ஒட்டப்பிடாரத்தில் PTR அமைச்சர், எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாருக்கு பாஜக சார்பில் நினைவு மரியாதை!!
அடுத்த
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு தூத்துக்குடி காங்கிரஸ் சார்பில் மரியாதை நிறைந்த மலரஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026