தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர், திரு.வி.கே. நகர் உள்ளிட்ட பகுதியில் இரண்டு நாட்களாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
உடனே அப்பகுதிக்கு விரைந்த மாநகராட்சி எதிர்கட்சி கொறாடாவும், கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திர மூர்த்தி மின்சாரம் இன்றி தவிக்கும் பகுதிகளை பார்வையிட்டு சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்சாரம் வழங்கி பொதுமக்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
