விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சந்திரகிரி–கொள்ளம்பரம்பு பகுதியில் செயல்பட்டு வரும் கே.கே.எம் கல் கோரியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், PUCL தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் சுரேஷ் மீது நெல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையிலும் குளத்தூரில் மக்கள்தொகை திரண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக செயல்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தி, மின்னல் அம்ஜத், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சாமு காந்தி உள்ளிட்டோர் பேசி, கல் கோரி நிறுவனத்தின் செயல்பாடுகள் சுற்றுப்புற சூழல், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துவதாகவும், உடனடி நடவடிக்கையாக கல் கோரியை மூட மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பெரும் திரளான பொதுமக்கள் பங்கேற்பு
குளத்தூர் சமூக செயல்பாட்டாளர் எபநேசர், அய்யனார்புரம் அரி ராம் ஜெயராமன், குளத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னச்சாமி, ஸ்ரீ வைகை கொண்டபெருமாள்புரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியன், கிராம தலைவர் பழனிச்சாமி, மக்கள் நல இயக்க பொறுப்பாளர் முத்து மாடசாமி, அழகு தங்கம், ஜோதிமணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து பேசினர்.
குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்களும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்றனர். குளத்தூர் காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
1. PUCL தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
2. சந்திரகிரி–கொள்ளம்பரம்பில் உள்ள கே.கே.எம் கல் கோரியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
3. கிராம சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட ஆட்சித்தலைவர் தடை விதிக்க வேண்டும்.
4. குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றும் வகையில் நிரந்தர வசதி அமைக்க வேண்டும்.
5. குளத்தூர் – ராமச்சந்திராபுரம் கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்களை அவர்கள் கிராமத்திலே வழங்க வேண்டும்.
6. ஸ்ரீ வைகை குண்டப்பெருமாள்புரம் கண்மாய் நீர்பிடிப்பு வருகால் புதியதாக அமைக்க வேண்டும்.
மாதவன் சால்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கண்மாய் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.
கடலுக்குச் செல்லும் தண்ணீர் கண்மாயில் செல்ல ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும்.
7. அய்யனார்புரம் கிராமத்தில் மீட்டெடுக்கப்பட்ட மேச்சல் தரை அனாதின நிலங்களை மக்களுக்கே வழங்க வேண்டும்.
8. வைப்பார் பஞ்சாயத்து கலைஞானபுரம் – துலுக்கன்குளம் பகுதியில் சிப்காட் நிலங்களை தனியார் உப்பளங்களுக்கு வழங்கக்கூடாது.
அப்பகுதியில் புதியதாக அமைக்கப்படும் சாலைகள் தரமான சாலைகளாக அமைக்கப்பட வேண்டும்.
தூத்துக்குடி
குளத்தூரில் கல் கோரி எதிர்ப்பு உச்சம் – PUCL தலைவர் மீதான தாக்குதலுக்கும் கடும் கண்டனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பலவேசக்காரன் கோவில் நிலம் மற்றும் கண்மாய் கால்வாய் ஆக்கிரமிப்பு — மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
அடுத்த
இருசக்கர வாகனத்தில் திடீர் சுற்றுப்பயணம் – மேயர் ஜெகன் பெரியசாமி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வெளியேற்ற பணிகளை ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026