துரை வைகோ அவர்கள் இன்று மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதலில் திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள் காலனியில் உள்ள காமாட்சி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளை பாராட்டினார்.


அதனைத் தொடர்ந்து சத்யா நகர் மேம்பாலம் அருகிலுள்ள பெரியசாமி நகரில், மியான்மர் நாட்டில் சிக்கித் தவித்தவர்களை தனது முயற்சியால் மீட்டுக் கொண்டு வந்தவர்களுடன் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, எட்டையபுரம் சாலையில் வைத்து பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்க தேவி ஆலய நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் துரை வைகோ அவர்களை நேரில் சந்தித்தனர்.


அப்போது, வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ள அருள்மிகு வீரசக்க தேவி ஆலய திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்றுக்கொண்ட துரை வைகோ, விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பு ஆலய நிர்வாகிகள் மற்றும் தொண்டர் படை நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.