தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டும் விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அய்யனடைப்பு ஊராட்சியில் 13 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவி குழு கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதில் வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி, வருவாய் ஆய்வாளர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் நாகராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட சமூக வலைதள பொறுப்பாளர் மீனாட்சி, கிளை செயலாளர் சின்னதுரை மற்றும் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் நாகராஜ், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் மணிகண்டன், சின்னதுரை, கிளை செயலாளர்கள் அண்ணாமலை, சண்முகராஜ், மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குமாரகிரி ஊராட்சி சவேரியார்புரம் கிராமத்தில் 12 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ஸ்டாலின், வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சண்முககனி, மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி, கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன், கிளை செயலாளர் ஸ்டாலின், மகளிரணி மஞ்சுளா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குலையன்கரிசல் ஊராட்சி போடம்மாள்புரம் விலக்கில் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையும் திறந்து வைக்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி, கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, கிளை செயலாளர்கள் வசந்த், ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் குலையன்கரிசல் கிராமத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவும் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் ஐகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி செல்வி, வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி, ஊராட்சி செயலர் கோமதி, கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, கிளை செயலாளர்கள் மங்களபாண்டி, ஜெகன், ரமேஷ், சரவணகுமார், அருள்லியோன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுகளில் ஊரக மக்களின் தேவைகள் குறித்தும், புதிய கட்டமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் நலன்கள் பற்றியும் உறுப்பினர் சண்முகையா விளக்கமளித்தார்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் – பல்வேறு மேம்பாட்டு பணிகள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டும் விழாக்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடு தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை — அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
அடுத்த
முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினை அவமதித்த பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி திமுக வழக்கறிஞர் அணி புகார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026