தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து டேவிஸ்புரம் கிராமத்தில், 22ஆம் ஆண்டு தெய்வீக திருமகனார் தேசிய செம்மல் பசும்பொன் சித்தர் உ. முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழா ஐப்பசி மாதம் 13ஆம் நாள் (30.10.2025) அன்று நடைபெற்றது.

அதனை முன்னிட்டு இன்று (02.11.2025) காலை டேவிஸ்புரம் முத்து விநாயகர் ஆலய வளாகத்தில் மாபெரும் 5ஆம் ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மற்றும் தொழிலதிபர் ஏ. சுதாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் டி.டி.சி. ராஜேந்திரன் (தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர்), திமுக மாவட்ட பிரதிநிதி சப்பாணி முத்து, தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி (எ) பொன்பாண்டி, தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பந்தய பரிசளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது:

நடுமாடு பந்தயம்
முதல் பரிசு – மாப்பிள்ளையூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்
இரண்டாம் பரிசு – திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி (எ) பொன்பாண்டி
மூன்றாம் பரிசு – டேவிஸ்புரம் இளைஞர் அணி தேவர் பேரவை
நான்காம் பரிசு – முத்துப்பாண்டி (அபி டிரான்ஸ்போர்ட், ராமநாதபுரம் காடமங்களம்)
கொடி பரிசு – வீரமணி நாடார், மாப்பிள்ளையூரணி

சின்னமாடு பந்தயம்
முதல் பரிசு – தொழிலதிபர் ஏ. சுதாகர்
இரண்டாம் பரிசு – காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவர் சின்ன காளை
மூன்றாம் பரிசு – ஆர். நட்டார் (நட்டார் எர்த் மூவர்ஸ், டேவிஸ்புரம்)
நான்காம் பரிசு – சந்திரன் தேவர் (சந்திரன் எர்த் மூவர்ஸ், திரேஸ் நகர்)
கொடி பரிசு – கருப்பசாமி தேவர் (யு.கே. பில்டர்ஸ், டேவிஸ்புரம்)

பூஞ்சிட்டு பந்தயம்
முதல் பரிசு – தொழிலதிபர் ஏ. சுதாகர்
இரண்டாம் பரிசு – கே. ராஜேந்திரன் (அரிமா எர்த் மூவர்ஸ், மாப்பிள்ளையூரணி), திமுக துணைச் செயலாளர் ராமச்சந்திரன், கிளைச் செயலாளர் சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் ஏ.ஆர். சேவியர்
மூன்றாம் பரிசு – தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன்
நான்காம் பரிசு – எம்.ஜி.ஆர். நகர் மணிகண்டன் (ஆத்விக் பில்டர்ஸ்)
கொடி பரிசு – அர்ஜுனன், சபரி ராஜன் (டேவிஸ்புரம்)

பந்தய தொடக்க நிகழ்ச்சி நடுமாடு பந்தயத்தை தொழிலதிபர் ஏ. சுதாகர் தொடங்கி வைத்தார். சின்னமாடு பந்தயத்தை எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வர்ணையாளர் சண்முகபுரம் கருப்பசாமி மற்றும் ரேக்ளா ரசிகன், காளை பிரியன் ஆகியோர் வர்ணனையாற்றினர்.

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி மற்றும் டேவிஸ்புரம் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.