தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) தொடர்பான மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருக்கான காணொளி காட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் சீராக நடைபெற முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

நிகழ்வில் பல்வேறு தொகுதி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியல் சீராய்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.