திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) குறித்து மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான திருமதி கீதா ஜீவன் அவர்கள் பங்கேற்று, வாக்காளர் பட்டியல் சீராய்வு பணிகள் தொடர்பாகக் கழகத்தலைவரின் வழிகாட்டுதல்களை கவனமாகக் கேட்டறிந்து, துறைத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வழியாக விரைவான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை வழங்கினார்.