தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத்தை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.


புதிய பொறுப்பில் மக்கள் நலன் கருதி சிறப்பாக செயல்பட வேண்டும் என பெருமாள்சாமி கதிர்வேல் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகவும், அரசியல் வட்டாரங்களில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.


இந்த நிகழ்வில், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜான் பிரிட்டோ உடனிருந்தார். தூத்துக்குடி அரசியல் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கவனம் பெற்றுள்ளது.