தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதிய பேருந்து சேவைகளை கீதாஜீவன் அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் ராமகிருஷ்ணன், கோட்ட மேலாளர் சண்முகம், கிளை மேலாளர் ரமேஷ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள், தொமுச நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதியதாக தொடங்கப்பட்ட பேருந்து வழித்தடங்கள்:

1. TN72N 2675 – தூத்துக்குடி – சுப்பிரமணியபுரம்
வழி: கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சேர்வைக்காரன்மடம், சாயர்புரம்

2. TN72N 2684 – தூத்துக்குடி – கீழவைப்பார்
வழி: அமெரிக்கன் மருத்துவமனை, தாமஸ்புரம், தருவைகுளம், பட்டிணமருதூர், வேப்பலோடை, கல்லூர்

3. TN72N 2656 – தூத்துக்குடி – பெருங்குளம்
வழி: கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, செபத்தையாபுரம், சாயர்புரம், நட்டாத்தி

4. TN72N 2670 – கோவில்பட்டி – வெள்ளப்நேரி
வழி: நாலாட்டின்புதூர், வானரமுட்டி, கட்டாரகுளம், செட்டிக்குறிச்சி, கோனார்கோட்டை

5. TN72N 2692 – கோவில்பட்டி – கீழஈரால்
வழி: திட்டகுளம், கொடுக்கம்பாறை, கசவன்குன்று, செமபுதூர், டி.சண்முகபுரம், வாலம்பட்டி

6. TN72N 2688 – கோவில்பட்டி – வேடப்பட்டி
வழி: லிங்கம்பட்டி, கடலையூர், மலைப்பட்டி, தாப்பாத்தி, வடமலாபும், அச்சங்குளம்

7. TN72N 2716 – கோவில்பட்டி – அகிலாண்டபுரம்
வழி: நாலாட்டின்புதூர், இடைச்செவல், வில்லிச்சேரி, சிவஞானபுரம், சவலாப்பேரி, கரிசல்குளம்

நிகழ்ச்சியில் தொமுச நிர்வாகிகள் பொதுச் செயலாளர் தர்மன், பொருளாளர் முருகன், மத்திய தொழிற்சங்க துணை செயலாளர்கள் கருப்பசாமி, மகா விஷ்ணு, நகர கிளை செயலாளர் லிங்கு சாமி, தலைவர் பி.வி. முருகன், பொருளாளர் மனோகர வேல், சரவணன், மாரியப்பன், சுரேஷ், படைப்பா கணேஷ், ராஜ குமார சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விடியல் பயணத் திட்டம் — தூத்துக்குடி மண்டல புள்ளிவிவரங்கள்

தமிழக அரசின் விடியல் பயணத் திட்டம் 08.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வருவதுடன், தூத்துக்குடி மண்டலத்தில் 107 நகரப் பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தினசரியாக சுமார் 1,10,000 மகளிர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

08.05.2021 முதல் நவம்பர் 2025 வரை மொத்தம் 11 கோடியே 73 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 31,033 திருநங்கைகள் மற்றும் 7,17,000 மாற்றுத்திறனாளிகள் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் பேருந்து சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.