தூத்துக்குடியில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவின் 53 வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று (02.04.2025) காலை தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி ( அண்ணா பழைய பேருந்து நிலையம்) அருகில் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ் முன்னிலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட மதிமுக துணை செயலாளர் வீரபாண்டி செல்லச் சாமி, கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், மாவட்ட பிரதிநிதி செந்தாமரை கண்ணன், மகளிர் அணி துணை செயலாளர் ஆண்டாள், ஒன்றிய செயலாளர் சுந்தர் ராஜ், எம்.எல்.எப். தலைவர் காசி ராஜன், கிளை செயலாளர் எபினேசர் தாஸ், எம்.எல்.எப். துணை தலைவர் பொன்ராஜ், வட்ட பிரதிநிதி பால்ராஜ் நாயக்கர், 53 வது வட்ட செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட பிரதிநிதிகள் மனோகர், ராதாகிருஷ்ணன், பொய்யாழி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணப்பெருமாள், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி பாலன், பெரும்படை சாஸ்தா கோவில் செல்வம், மற்றும் மதிமுக மாவட்ட, நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 