திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் முக.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்த நாள் மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என மாவட்டக் கழக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் அவர்கள் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜனநாயகப் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று, கழக வளர்ச்சியையும் உறுப்பினர் சேர்க்கையையும் கணிசமாக உயர்த்தியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
“எல்லோருக்கும் எல்லாம்” என்ற உயரிய நோக்கத்துடன் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள், அன்புக் கரங்கள், தாயுமானவர் திட்டம், அன்புச்சோலை, பணிபுரியும் மகளிர் நலனுக்கான தோழி விடுதிகள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், கலைஞரின் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டம் முழுவதும் நற்பணிகள்
மார்ச் 1ஆம் தேதி மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழகங்கள் தோறும்
கழகக் கொள்கைப் பாடல்கள் ஒலிபரப்புதல்
ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
கழகக் கொடிகளை புதுப்பித்து புதிய கொடிகள் ஏற்றுதல்
பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அமைந்துள்ள படிப்பகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்குதல்
கழக முன்னோடிகளை சிறப்பித்தல்
மேலும், சமுதாயத்தில் நலிந்த மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இயன்ற உதவிகளை செய்து மக்கள் பயன்பெறும் வகையில் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என செயல்வீரர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் – விருப்ப மனு அளித்த அமைச்சர்
நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் தனது விருப்ப மனுவை கழக நிர்வாகிகள் புடைசூழ அளித்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கயத்தாறு முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, தூத்துக்குடி மாநகர திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், தூத்துக்குடி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் துறைமுகம் ப்ளோரன்ஸ், கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி கிழக்கு நகரச் செயலாளர் சுரேஷ், மாநகரத் துணைச் செயலாளர்கள் கனகராஜ், கீதா முருகேசன், பிரமிளா, ஒன்றியக் கழகச் செயலாளர்கள் சின்ன பாண்டியன், சுப்பிரமணியன், முருகேசன், கருப்பசாமி, ராதாகிருஷ்ணன், ஜெய கண்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, ஆர். ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, காசி விஸ்வநாதன், நவநீதக்கண்ணன், ராமசுப்பு, அன்பு ராஜன், இமானுவேல், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல் ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், பேரூர் கழகச் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், சுரேஷ் கண்ணன், பாலகுமார், வேலுச்சாமி, பாரதி கணேசன், கோவில்பட்டி முன்னாள் ஒன்றியச் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், எம்.சி. நாராயணன், சுரேஷ், பகுதி துணைச் செயலாளர் ஜெய்சிங், வட்டக் கழகச் செயலாளர்கள் பொன்ராஜ், ரவிச்சந்திரன், முனியசாமி, கதிரேசன், கங்கா ராஜேஷ், மாமன்ற உறுப்பினர்கள் ஜான்சிராணி, தெய்வேந்திரன், விஜயகுமார், ஜான் சீனிவாசன், சரவணகுமார், நாகேஸ்வரி, ஜெயசீலி, பவானி மார்ஷல், ரெக்சிலின், வைதேகி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், கவிதா தேவி, சீனிவாசன், டி.கே.எஸ். ரமேஷ், குபேர் இளம்பருதி, ஈ.பி. ரமேஷ், அபிராமிநாதன், அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, ராதாகிருஷ்ணன், மகேந்திரன், பிரபு, அந்தோணி கண்ணன், செல்வின், பிரவீன் குமார், ஜெயிலாபுதீன், ரவி, சங்கரநாராயணன், இந்துமதி, சுரேஷ்குமார், கிறிஸ்டோபர் விஜயராஜ், ரூபராஜா, டேனியல், ரேவதி, சந்தனமாரி, எமல்டன், டோலி, மகேந்திரன், ஸ்ரீதர், கரண், ராஜேஷ், குமரன், மகேஸ்வரன் சிங், புவனேஷ் குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.கே.ஆர். அய்யாதுரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குருராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை மக்கள் நலப்பணிகளுடன் இணைத்து கொண்டாடுவதுடன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி அமைப்புகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளிலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரம் காட்டி வருகிறது.