தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல தசாப்தங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலைகள் ஆக்கிரமிப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
வி.இ.ரோடு – ரத்னா காலனி வழியாக சண்முகபுரம் பகுதிக்குச் செல்லும் மூன்று முக்கிய பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அவற்றை ஆய்வு செய்த மேயர் ஜெகன், நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார். அதன்படி, நகரஅமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சுவர்களை இடித்தனர்.
ஒரே நாளில் மூன்று வழித்தடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், 30–40 ஆண்டுகளாக சிக்கலில் இருந்த பொதுமக்களுக்கு சுதந்திரமான சாலை பயன்பாடு கிடைத்துள்ளது. மேயரின் விரைவான நடவடிக்கையை பாராட்டி, அப்பகுதி மக்கள் உற்சாகத்தில் வரவேற்றனர்.
“புகார் வந்த 12 மணி நேரத்தில், 40 வருட ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது” – இது மேயர் ஜெகன் பொியசாமியின் அதிரடி பணியின் சான்று என பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.
தூத்துக்குடி
அதிரடி மேயர் ஜெகன்! 40 வருட ஆக்கிரமிப்பு – 12 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாயுடு மகாஜன சங்க செயலாளர் ரெங்கசாமிக்கு மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் பாராட்டு!!
அடுத்த
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற சரஸ்வதி பூஜை விழா!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026