திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா மார்ச் 3ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை 7:03 மணிக்கு விநாயகர் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு 7:43 மணிக்கு தொடர்ந்து காலை 7:53 மணிக்கு சுவாமி குமரவிடங்கப் பெருமாள் வள்ளி, தெய்வானையுடன், பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக வளம் வந்து, காலை 10.50 மணிக்கு நிலைக்கு வந்து அதன் பின் 11.00 மணிக்கு தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து, நன்பகல் 12.35 மணிக்கு நிலைக்கு வந்தது.

தேரோட்டத்தின் போது விண்ணை மட்டும் அளவிற்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தேரோட்ட நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமை உச்சவியல் நீதிபதி வஷித்குமார், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வரதராஜன், கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், முன்னாள் தக்கார் கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையர் நாகவேல், நகராட்சி தலைவர் சிவா ஆனந்தி ரமேஷ், துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையர் கண்மணி, மாவட்ட அறங்காவலர் வாள்சுடலை, அதிமுக ஜெ.பேரவை மாவட்ட இணை செயலாளர் பழக்கடை திருப்பதி, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தப் பாண்டியன், தமிழ் நாடு பிராமண சமாஜம் நிறுவன தலைவர் ஹரிஹர முத்து ஐயர், தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு, விவேகா கன்ஸ்ட்ரக்ஷன் நாராயணன், அதிமுக ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், ஜெ.பேரவை மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், நகர துணை செயலாளர் செல்வ சண்முகசுந்தர், திமுக 24 வது வார்டு செயலாளர் ரமேஷ், ஹோட்டல் அர்ச்சனா சக்தி கிட்டப்பா, அசோக் பவன் ராஜா பண்ணையார், சரவணா லாட்ஜ் சுந்தரம் பண்ணையார், ஓட்டல் காவேரி தங்கராஜ், ஹோட்டல் ரமேஷ் ஐயர் நாகராஜ், நகர விடுதி உரிமை யார்கள் சங்கத் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் அருள்ராஜா, பொருளாளர் பார்த்தசாரதி, துணைத் தலைவர் சந்திரன், எஸ்.எஸ்.வி பேலஸ் சிவராமகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ரவிகிருஷ்ணன், உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று 11ம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பக்குளத்தில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளும் சுவாமிக்கும், அம்பாளுக்கும், சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து நள்ளிரவில் தெப்பத்தில் உள்ள தேரில் எழுந்தருளி 11 முறை வலம் வந்து அருள் பாலிக்கும் தெப்ப உற்சவம் நடக்கிறது. திருவிழாவிற்கு காண ஏற்பாடுகளை தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.