திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக "ஓரணியில் தமிழ்நாடு" என்ற பிரசார இயக்கத்தை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.


இந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தொடக்கி வைத்து, வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்து, திமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.


இந்நிகழ்வில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.