எட்டயபுரம் நகர முக்குலத்தோர் சங்கம் இளைஞரணி மற்றும் இராமனூத்து, ஈராச்சி, கசவன்குன்று, முதலிபட்டி, இளம்புவனம், தலைக்காட்டுபுரம், செமப்புதூர் சுற்றுவட்டார முக்குலத்தோர் இணைந்து, பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 118-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு எட்டயபுரம்–விளாத்திகுளம் சாலையில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஏற்பாடு செய்தனர்.

பந்தயத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
நிகழ்வில் எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், முக்குலத்தோர் சங்கத் தலைவர் கார்த்திக், வடக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் P.K. செந்தில், வார்டு உறுப்பினர் மணிகண்டன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் M.R. முனியசாமி, வார்டு செயலாளர்கள் சின்னப்பர், அருள்சுந்தர், உமையராஜ் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம்–மதுரை ரோட்டில் பசுவந்தனை பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தொடங்கிய வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் G.V. மார்கண்டேயன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

சமூக ஒற்றுமையையும், பகுதி முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இரண்டு நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.