தூத்துக்குடியில் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கிய பசு மற்றும் கன்றினை துரிதமான செயல்பாடால் உயிருடன் மீட்ட தலைமை காவலரின் மனிதாபிமான செயல் பாராட்டை பெற்றுள்ளது.
கடந்த 7ம் தேதி மாலை தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட்டில் ரயில் இன்ஜின் வருவதற்காக கேட் மூடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பசு மற்றும் அதன் குட்டி திடீரென தண்டவாளத்தில் நுழைந்து கேட்டிற்குள் நின்றன. அச்சமயம் அங்கிருந்த போக்குவரத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் சுப்பையா திடீர் அபாயத்தை உணர்ந்து, ரயில் வருவதற்கு முன் பசுவையும் கன்றையும் பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தி வைத்தார். இதனால் இரண்டு உயிர்களும் பத்திரமாக மீட்கப்பட்டன.
சுப்பையாவின் வேகமான மற்றும் மனிதாபிமானமான செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று தலைமை காவலர் சுப்பையாவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர்.
இச்சம்பவம் “உயிர் முக்கியம்” என்ற உணர்வை மீண்டும் வெளிப்படுத்தி, காவல்துறையின் மனிதநேய முகத்தையும் பொதுமக்கள் மத்தியில் உயர்த்தியுள்ளது.
தூத்துக்குடி
ஒரு நொடி தாமதமிருந்தால் உயிரிழந்திருக்கும் பசு–கன்று… காவலர் சுப்பையா வீரச் செயல்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டி தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!!
அடுத்த
விளாத்திகுளம் தொகுதியில் ரூ.19.04 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை பணிகள் தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026