சமூக நலப்பணிகளில் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வரும் மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் இன்று தூத்துக்குடி நகரில் சாலையோரத்தில் வசிக்கும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், 50 குடும்பங்களுக்கு புதிய உடைகள் வழங்கப்பட்டன. மேலும், அங்கு வசிக்கும் அனைவருக்கும் போர்வைகள் மற்றும் பசியாற உணவுகளும் வழங்கப்பட்டன.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழும் இக்குடும்பங்களுக்கு இது பெரும் ஊக்கமும் ஆதரவாக அமைந்தது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் பேச்சிராஜா, சின்னத்துரை, சுதாகர், லக்ஷ்மணன், செல்வி, கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சேவையில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் போது பேசினார் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. எம்.ஆதி ஆனந்த் “பழங்குடியினர் குடும்பங்கள் கேட்டுக்கொண்ட தேவைகளை நிறைவேற்ற தேவையான உதவிகளை விரைவில் செய்து தருவோம். சமூக நலனுக்காக மருதம் அறக்கட்டளை எப்போதும் மக்களின் பக்கம் நிற்கும்” என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி
மனிதநேயம் பசுமையாக மலர்ந்தது — பழங்குடி குடும்பங்களுக்கு புத்தாடை, போர்வைகள் வழங்கிய மருதம் அறக்கட்டளை!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஜெயலானி தெருவில் கடை… எட்டையாபுரம் சாலையில் தகர்சீட்டு… மாநகராட்சி நிலம் யாருக்காக?
அடுத்த
சமூக நலத்தின் சின்னம்! – தூத்துக்குடி 50-வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமாருக்கு “செய்தி களம்” நியூஸ் வெப்சைட் இனிய பிறந்தநாள் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026