தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி தேரோட்டம் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாள் பாகம்பிரியாள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டு மனநிறைவு அடைந்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு பாகம்பிரியாள் மகளிர் அறக்கட்டளை சார்பில் சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கான அன்னதான ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு அறக்கட்டளை தலைவர் சங்கரி ரமேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவஜோதி நரேந்திரன், ஜெயந்தி திருவேங்கடம், முத்துலட்சுமி ராஜபாண்டியன், மகாதேவி திருச்சிற்றம்பலம், வள்ளி இளங்கோ ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.

அன்னதான நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் துவக்கி வைத்து, பக்தர்களுக்கு உணவை வழங்கி ஆசீர்வாதம் பெற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அதிமுக மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டைகர் சிவா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், பகுதி செயலாளர் ஜெய் கணேஷ், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் சரவண பெருமாள், தலைமை பேச்சாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

அதேபோல் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்கள் மாடசாமி, சங்கரநாராயணன், மகளிர் அணி துணைச் செயலாளர்கள் அன்னபாக்கியம், முத்துலட்சுமி, பாசறை நிர்வாகிகள் சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, இசக்கிமுத்து, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் செல்வ மாரியப்பன், ஐடி விங் சொக்கலிங்கம், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்பட பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.