அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணையின் படியும், தூத்துக்குடி அமமுக புறநகர் மாவட்ட செயலாளர் ஜானியேல் சாலமோன் மணி ராஜ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், அமமுக மகளிரணி மாநில துணை செயலாளர் சண்முககுமாரி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகராட்சி பிரையன்ட் நகர் 12வது தெரு, கட்டபொம்மன் நகர் 45வது வார்டு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


விழாவிற்கு வட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் வேத மாணிக்கம், இலக்கணமுத்து, மாதவன் பிள்ளை, மனோகர், ராமர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும், அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு உற்சாகமாக நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.