தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து இன்று (12.03.2025) மாலை நடைபெற்றது.
பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கணினி பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த மாதத்தில் தூத்துக்குடி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கணினி பட்டா கோரி மனு அளிப்பதற்கு ஏதுவாக முகாம் ஒன்று அமைச்சர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த முகாமில் 3000 க்கு மேலான மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கு கூடிய விரைவில் படிப்படியாக கணினி பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று (12.03.2025) முதல் கட்டமாக 151 பயனாளிகளுக்கு தமிழக அரசின் உத்தரவின் பேரில் கணினி பட்டா வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை அமைச்சர் வழங்கினார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்!!
அடுத்த
அரசு புறம்போக்கு நிலமா என உறுதி செய்ய வேண்டும்!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026