பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை அருள்மிகு வீரசக்க தேவி ஆலயத்தின் 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.


மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படையின் சார்பில், திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு புண்ணிய தீர்த்தம் எடுத்து செல்லும் நிகழ்வும், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி 40வது ஆண்டு விழாவும் நடைபெற உள்ளன.


இதனை முன்னிட்டு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து விழா அழைப்பிதழ் வழங்கினர்.


இந்த நிகழ்வில், விழா குழு தலைவர் வலசை கண்ணன், கௌரவ தலைவர் மாப்பிள்ளை சாமி, கௌரவ தலைவரும் தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதியுமான வெயில் ராஜ், மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க அழைப்பிதழ் வழங்கி விழா ஏற்பாடுகளை பற்றி கலந்துரையாடினர்.