தூத்துக்குடி மாவட்ட மாநகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள புர்களை அகற்ற கோரி இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் விடுத்துள்ள கோரிக்கையில் :-

தூத்துக்குடி மாநகரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியான சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டு காலமாக தண்ணீர் தேங்கி நிலை கோரை புர்க்கள்  மற்றும் ஊர்வன ஐந்துக்களால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பாக வலியுறுத்துகிறோம்.

என்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.