முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம், கமுதி, சிவகங்கை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரை நோக்கி சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி – திருச்செந்தூர் பிரதான சாலையில் டைமண்ட் கார்கோ லாஜிஸ்டிக் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.
நிறுவன அதிபர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சேவை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் வேலம்மாள், சக்திவேல், முத்துப்பாண்டி, செல்வராஜ், வடிவேல், பேச்சுத்தங்கம், ஆல்பர்ட் ராஜா, சங்கரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.