100 நாள் வேலை திட்டத்தின் கீழ் உள்ள நிதி பாக்கியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றியங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று தலைமை கழகத்தில் இருந்து அறிவிப்பு வெளியானது.

இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து ஓட்டப்பிடாரம் மெயின் பஜாரில் எனது தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற இருக்கிறது. ஆர்பாட்டத்தில் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஒன்றிய செயலாளரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-


திராவிட முன்னேற்ற கழக தலைமை கழகத்தின் அறிவிப்பின் படி திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவின் படி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி, துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஆலோசனையின் படி ஊராட்சிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் உள்ள நிதி பாக்கியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நாளை (29.03.2025) காலை 10.00 மணியளவில் ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் தேரடி திடல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த ஆர்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  ஒன்றிய நிர்வாகிகள், கிளைகழகம், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய அணி நிர்வாகிகள், அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.