தமிழகம் முழுவதும் சில தினங்களுக்கு முன்பு இன்று (05.04.2025) தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் சிறப்பு நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி இன்று தூத்துக்குடி தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் சார்பில் சிறப்பு நுகர்வோர் குறைதீர்ப்பு முகாமானது இன்று (05.04.2025) காலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சகர்பான் பி.இ. தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு முகாமில் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் கலந்து கொண்டு அளித்த மனுவில் 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சக்தி நகர், குருவி மேடு, பிரையன்ட் நகர் 13, பாரதி நகர், ஆகிய பகுதிகளில் உள்ள சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்கள் அமைத்து விபத்துகள் ஏற்படதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை மனு அளித்தார்.

அப்போது மாவட்ட மேற்பார்வை பொறியாளர் இந்த மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்.