முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.


அவரை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழுத் தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜி.வி. மார்கண்டேயன் விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்றார்.


அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாகக் கூடி உற்சாகக் குரல்களுடன் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், கன்னியாகுமரி மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் பயணமானார்.