தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் உள்ள இடத்தை போலி பத்திரம் பதிவு செய்து இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக வழக்கறிஞர் பரபரப்பு புகார் அளித்தார்.

போலி பத்திரம் பதிவு செய்து இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக வழக்கறிஞர் முனீஸ்குமார் இன்று மாலை தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து செய்தியாளர் சந்திப்பின் போது பரபரப்பு புகார் அளித்தார்.

வழக்கறிஞர் முனீஸ்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியது :-

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். சென்னை, சூளைமேடு பகுதியை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முனிரத்தினத்திற்கு சொந்தமான நிலம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து, சோட்டையன் தோப்பு பகுதியில் சர்வே எண் 85/2Aல் 64 சென்ட் உள்ளது.

மேற்படி முனிரத்தினம் வயோதீக சூழ்நிலையாலும், அடிக்கடி போக்குவரத்து மேற்கொள்ள முடியாத காரணத்தினாலும், எனக்கு மேற்படி நிலத்தை பராமரிக்கவும், பாதுகாக்கவும், எனக்கு பதிவு செய்யபப்படாத பத்திர ஆவணத்தின் மூலம் அதிகாரம் கொடுத்துள்ளார்.

நான் மேற்படி நிலத்தினை தினமும் பார்வையிட்டு வருகிறேன். இன்று காலை 11 மணியளவில் மேற்படி நிலத்தை பார்வையிட சென்றபோது அப்போது எங்கள் நிலத்திற்கு அத்துமீறி வேலிகளை அகற்றிக்கொண்டிருந்த செந்தில்குமார், மாதவன், மற்றும் சிலரிடம் சென்று தாங்கள் யார்? நிலத்தை சுத்தம் செய்கிறீர்கள் என்று கேட்ட போது மேற்படி நபர்கள் நீ யார்ல எங்களை கேட்பதற்கு, நாங்கள் அப்படிதான் முனிரத்தினம் இடத்திற்குள் அத்துமீறி வருவோம்.

இனிமேல் எங்களிடம் வந்து ஏதாவது கேட்டால் உன்னை வெட்டி கொல்லாமல் விடமாட்டோம் என கொலைமிரட்டல் விடுத்தனர். மேற்படியார்களின் கையில் காயங்களை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களை வைத்திருந்தனர்.

நான் எனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்து வந்துவிட்டேன். ஆகையால் சமூகம் சட்டப்படி முற்றிலும் முரளி ரத்தினம் என்பவருக்கு பாத்தியப்பட்டு எனது அனுபவத்திலும், ஆளுகையிலும், பராமரிப்பிலும், பாதுகாப்பிலும், இருந்து வரும் மேற்படி நிலத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்த செந்தில்குமார் மாதவன் மற்றும் பார்த்தால் அடையாளம் காண்பிக்கக்கூடிய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.