தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு இன்று (23.06.2025) காலை மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுமார் 142 ஏழை எளிய மக்கள் இலவச வீட்டு மனைகள் கேட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் மேற்கண்ட நபர்களுக்கு இலவச வீட்டுமனைகள் தமிழக அரசு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியாளரை வலியுறுத்தும் வகையில் கவன ஈர்ப்பு மனு கொடுக்கும் போராட்டம் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி மாநில நிறுவன தலைவர் அர்ச்சுனன், தலைமையில் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி மாநில பொதுச் செயலாளர் சி.ராஜா, தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி மாநில பொருளாளர் இ. முத்து பெருமாள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்து பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்களுக்கு பேட்டி அளித்தார் பேட்டியின் போது இரண்டரை வருடங்களாக மாப்பிள்ளை யூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட வீடு இல்லாத ஏழை எளிய மக்கள் இலவச வீட்டு மனைகள் அரசு வழங்க கோரி மனு கொடுத்தும் இதுவரை பலன் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் இது விஷயமாக தலையிட்டு மக்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க வேண்டும்.
15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி ஏற்பாடு செய்கின்ற மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தோழமை இயக்கத்தின் தொண்டர்கள் நிர்வாகிகள் என பெருமளவில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என கூறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்க சென்றனர். மாவட்ட ஆட்சியாளர் இல்லாத காரணத்தால் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவை வழங்கி குறைகளை எடுத்து கூறினார்கள். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
நிகழ்வில் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் M. ஜான், தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி வடக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் கா. சீனிவாசன், தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் S. முனியம்மாள், தமிழர் முன்னேற்றக் கழகம் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் R. இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 142 ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைகள் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் கீழ அரசடி துப்பாஸ்பட்டி கிராமத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.65 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய்யின் பிறந்தநாளில் 15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - தலைமையின் கவனத்தை ஈர்த்த அஜிதா ஆக்னல்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026