தூத்துக்குடியில் விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளிகளில் வைத்து இன்று மாலை தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் (டாப்பர்ஸ்) பெற்ற மாணவ மாணவிகளை கவுரவ படுத்தும் விழா நடைபெற்றது.

விழாவில் சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நிர்வாகி நீதிபதி ஜோதிமணி, தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், முன்னாள் மாவட்ட நீதிபதி ரெத்னராஜ், நிதி ஆலோசகர் அன்பர் தாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் டாக்டர் டி.ஏ. பிரபாகர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் (டாப்பர்ஸ்) பெற்ற மாணவ மாணவிகளை கவுரவித்து, சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர் இறுதியில் ஐ.என்.டி. டாக்டர் வி. ராமா  நன்றியுரை நிகழ்த்தினார்.