தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதி திமுக வட்ட கழக பிரதிநிதி வேல்மணி இல்லத் திருமண விழா நேற்று (31.03.2025) தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

திருமண விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி இசக்கி ராஜா, பிரையண்ட் நகர் பகுதி கழகச் செயலாளரும், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவருமான கவுன்சிலர் ராமகிருஷ்ணன், 50 வது வார்டு வட்டச் செயலாளர் சிங்கராஜ், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், மாநகரத் தொண்டர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், வட்ட பிரதிநிதிகள் ராஜேஷ் லட்சுமணன், ஜி.எம். செல்வம், ராஜேந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

வரவேற்பு ஏற்பாடுகளை 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் சிறப்பாக செய்திருந்தார்.